தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி
நெஞ்சை நெகிழவைத்த நிகழ்ச்சி
நமது அருமை தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு மற்றும் அவரது குடும்ப நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 300 மணி அளவில் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் முன்னணி வகித்து உரை நிகழ்த்தினார் .அதன் மாவட்ட செயலர் ரவீந்திரன் குஜராத் முதல் சோழபுரம் வரை அவர் சென்ற தடங்களை ,தொழிற்சங்க இயக்கங்களில் அவரின் பங்களிப்பை குறிப்பாக அகில இந்திய மாநாடு நடைபெற்ற லூதியானா ,கொல்கொத்தா ,அஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு ,டெல்லி பேரணியில் ,JTO பயிற்சியின் போது கூட 8 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டத்தில் பங்கேற்றது .BSNLEU ஊழியர் சங்கம் தனது ஊழியர்களை என்றும் கைவிடாது என்பதை நிரூபிக்கும் முகமாய் 31/12/2016 அன்று மாவட்ட சங்கம் அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யுமாறு குறும் தகவல் அனுப்பியது .1 வார காலத்தில் நமது ஊழியர்கள் களத்தில் இறங்கி 1,90,951 ரூபாய் வசூல் செய்தனர் .குறிப்பாக ராஜபாளையம் தோழர்கள் 1,18,000 ரூபாய் வசூல் செய்து உள்ளனர் .தோழர் முத்துராமலிங்கம் அனைத்து ஊழியர்களிடம் இன்முகமாய் பழகியது, நிர்வாக ரீதியில் ராஜபாளையம குரூப்ஸ் பகுதியில் சிறந்த சேவை செய்தது அனைத்து தரப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அனைவரையும் தங்களது பங்களிப்பை செய்ய வைத்து உள்ளது .தோழரை நினைவு கூர்ந்து தோழர்கள் மதி கண்ணன் ,முத்துசாமி,கேசவன் ,SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் ,ராஜபாளையம் கிளை செயலர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகி அனவ்ரதம் ,தோழர்கள் வெள்ளைப்பிள்ளையார் ,ஷண்முககுமார் ஆகியோர் பேசினர் .அதன் பின் தோழரின் திரு உருவ படத்தைSNEA மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் திறந்து வைத்தார் .அவர் கண்ணீர் மல்க உரைநிகழ்த்த அனைவரும் கலங்கினர் .தோழர் K .R.கிருஷ்ணகுமார் மறைந்த தோழனுக்கு கவிதாஞ்சலி செலுத்தினார் .அதன் பின் அனைவரும் வழங்கிய ரூபாய் 1,90,951 ஐ முத்துராமலிங்கம் துணைவியாரிடம் மாவட்ட சங்கம் முதல் தவணையாக வழங்கியது .தோழியர்க்கு வரக்கூடிய பண பலன்கள் மற்றும் கருணை அடிப்படையில் ஆன வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெற நமது மத்திய ,மற்றும் மாநில சங்கங்கள் உரிய துணை புரியும் .
No comments:
Post a Comment