BSNLEU சங்கத்தின் 3 வது செயற்குழு முடிவின்படி பெரும் திரள் முறையீடு போராட்டம் 18/01/2017 அன்று நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன்,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,சிவகாசி OCB கிளை செயலர் தோழர் முத்துசாமி ,மாவட்ட உதவி செயலர்கள் அஷ்ரப் தீன் ,ஜெயக்குமார் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் கண்ணன் ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,சிங்காரவேலு உட்பட பெரும் திரளாக ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .மாவட்ட பொதுமேலாளர் அவர்களிடம் skilled wage ஐ கேபிள் பகுதியில் வேலையா பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதம் வழங்கப்பட்டது .மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு இப் பிரச்னையை கொண்டு செல்வதாக மாவட்ட பொது மேலாளர் உறுதி அளித்தார் .80 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் ESI அட்டை வழங்காத விஷயம் மீண்டும் நினைவூட்டப்பட்டது .ஒப்பந்த விதிப்படி ஒப்பந்தகாரரே கடப்பாரை ,மண்வெட்டி வாங்கி தர வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது , வழங்கப்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் .அதன் பின் நடை பெற்ற கூட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் .கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
கேபிள் பகுதி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் RLC வழிகாட்டலின் படி தரும்படி வலியுறுத்தி
பிப்ரவரி 10 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்
மார்ச் 6 ஆம் தேதி பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்
மார்ச் 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (மாநில சங்க ஒப்புதலோடு )
டெல்லி பேரணிக்கு ஒப்பந்த ஊழியர்கள் செல்வதற்கு BSNLEU
சங்கத்தின் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் தலா 200/- ரூபாய் கொடுப்பது
தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நல நிதிக்கு ட்ரான்ஸ்மிஷன் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் திரவியம் ரூபாய் 500 வழங்கினார் .மாண்டுவிடவில்லை மனிதாபிமானம் என்பதை நமது தோழர்கள் நிரூபித்து வருகிறார்கள் .சிவகாசி OCB கிளை மூன்றாம் தவணையாக ரூபாய் 2150 ஐ தோழர் முத்துசாமி வழங்கினார் .
No comments:
Post a Comment