Thursday, January 5, 2017

சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம் பி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம்


பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு சென்னையில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 3ம் தேதி வரை 4 நாட்கள் அகில இந்திய தலைவர் பல்பீர்சிங் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டில் 4 நாட்கள் பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இடையே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புழக்கத்தில் இருந்த 86 சதவிகித நோட்டுகளை செல்லாது என அறிவித்து 14 சதவிகித நோட்டுகளை மட்டுமே பணபரிவர்த்தனைக்கு ஏதுவாக்கி பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையை நாசமாக்கிய மத்திய மோடி அரசை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பேடிஎம், ஜியோ மணி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இதர தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டுப்போராட்டம்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளும், சங்க நடவடிக்கைகளும் முதலாளித்துவத்தால் முடக்கப்படுகின்றன. பிற்போக்கு அரசியல் கட்சிகளும், சக்திகளும் மக்களைப் பிரித்தாள முனைகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இத்தாக்குதல்கள் முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து மற்ற தொழிற்சங்கங்களை இணைத்து மேலும் தீவிரமாக போராடவும் தீர்மானிக்கப்பட்டது.
சமூக நல்லிணக்கம்
பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் வாழும் இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அம்சம் காரணமாக நல்லிணக்கத்தை பேணிவரும் வேளையில், மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளை அடிப்படைவாத சக்திகளும், பிளவுவாத சக்திகளும் ஊக்குவித்து வருவதால் ஒற்றுமைக்கு ஊறு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், புதிய சம்பள விகிதம் 1.1.2017 முதல் அமலாக உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆண்டுதோறும் ஸ்டேக்னேஷன் இன்கிரிமென்ட் வழங்க வேண்டும், போதிய பணி நியமனம் செய்ய வேண்டும், டெலிகாம் துறையில் வலுவான பொதுத்துறையை உருவாக்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
                     நன்றி :- தீக்கதிர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...