மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (ஜனவரி 31ல் )விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நமது BSNLEU தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் .மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராஜாராம் மனோகரன் ,ஜெயக்குமார் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,கிளை செயலர்கள் மதிக்கண்ணன் ,இளமாறன் ,மாரிமுத்து ,முத்துசாமி ,கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .பெரும் எண்ணிக்கையில் நம்து தோழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி
Tuesday, January 31, 2017
BSNLன் வருவாய் உயர்வு மற்றும் பல மத்திய சங்க செய்திகள்
மாநில சங்க சுற்றறிக்கை எண்:145படிக்க :-Click Here
Tuesday, January 24, 2017
பெரும் திரள் மேளா
24/01/2017 அன்று நமது BSNLEU ஊழியர்கள் மார்க்கெட்டிங் பகுதி ஊழியர்களுடன் இணைந்து பெரும் திரள் மேளாவை மாவட்டம் முழுவதும் நடத்தினார்கள் .வழக்கம் போல் சில அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் ஊழியர்களை மேளாவில் பங்கேற்பதை தடுப்பதில் முனைப்பு காட்டினார்கள் .கிராமப்புற பகுதிக்கு செல்வதற்கு போதிய வாகன ஏற்பாடு செய்யப்படவில்லை .இப்பேற்பட்ட நிலைமை மீண்டும் வரக்கூடாது என்பதற்கு மாவட்ட செயலர் மாவட்ட பொது மேலாளரின் கவனத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு சென்று உள்ளார் ..கன்னிசேரி புதூரில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் , விருதுநகர் கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,தோழர் மாரியப்பா ,சிம் விற்பனை புகழ் தோழர் K ராஜேந்திரன் பங்கேற்ற நிகழ்வில் 74 சிம்களும் .ராஜபாளையத்தில் 340 ம் சிவகாசியில் 267 ம் அருப்புக்கோட்டையில் 66 ம் 2 M N P யும் ,திருவில்லிபுத்தூரில் 47 ம் காரியாபட்டியில் 70 ம் , விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 83 ம் , காரியாபட்டியில் 70 ம் பாலவநத்தத்தில் 95ம் ஆக மொத்தம் 1042 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன , மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , தோழர் முத்துச்சாமி , தோழர் கருப்பசாமி , தோழர் ராஜு , தோழர்கள் முனியாண்டி , கணேசமூர்த்தி ,மதிக்கண்ணன் .உதயக்குமார் , தியாகராஜன் , தோழியர்கள் பாண்டி செல்வி. பாண்டியம்மாள் ,மேரி , கோவிந்தராஜ், வெள்ளை பிள்ளையார் , பொன்னுச்சாமி , ரவிச்சந்திரன் ,தியாகராசன், ராதாகிருஷ்ணன் , சுந்தரமகாலிங்கம் , சமுத்திரம் , சுப்பையா , நாகேந்திரன் , ஜெயராமன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கெடுத்து சிறப்பித்து உள்ளனர் .அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி
Thursday, January 19, 2017
பெரும் திரள் முறையீடு
BSNLEU சங்கத்தின் 3 வது செயற்குழு முடிவின்படி பெரும் திரள் முறையீடு போராட்டம் 18/01/2017 அன்று நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன்,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,சிவகாசி OCB கிளை செயலர் தோழர் முத்துசாமி ,மாவட்ட உதவி செயலர்கள் அஷ்ரப் தீன் ,ஜெயக்குமார் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் கண்ணன் ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,சிங்காரவேலு உட்பட பெரும் திரளாக ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .மாவட்ட பொதுமேலாளர் அவர்களிடம் skilled wage ஐ கேபிள் பகுதியில் வேலையா பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதம் வழங்கப்பட்டது .மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு இப் பிரச்னையை கொண்டு செல்வதாக மாவட்ட பொது மேலாளர் உறுதி அளித்தார் .80 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் ESI அட்டை வழங்காத விஷயம் மீண்டும் நினைவூட்டப்பட்டது .ஒப்பந்த விதிப்படி ஒப்பந்தகாரரே கடப்பாரை ,மண்வெட்டி வாங்கி தர வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது , வழங்கப்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் .அதன் பின் நடை பெற்ற கூட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் .கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
கேபிள் பகுதி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் RLC வழிகாட்டலின் படி தரும்படி வலியுறுத்தி
பிப்ரவரி 10 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்
மார்ச் 6 ஆம் தேதி பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்
மார்ச் 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (மாநில சங்க ஒப்புதலோடு )
டெல்லி பேரணிக்கு ஒப்பந்த ஊழியர்கள் செல்வதற்கு BSNLEU
சங்கத்தின் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் தலா 200/- ரூபாய் கொடுப்பது
தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நல நிதிக்கு ட்ரான்ஸ்மிஷன் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் திரவியம் ரூபாய் 500 வழங்கினார் .மாண்டுவிடவில்லை மனிதாபிமானம் என்பதை நமது தோழர்கள் நிரூபித்து வருகிறார்கள் .சிவகாசி OCB கிளை மூன்றாம் தவணையாக ரூபாய் 2150 ஐ தோழர் முத்துசாமி வழங்கினார் .
சிவகாசி பொது குழு கூட்டம்
கடந்த 11ம் தேதி சிவகாசி பொது குழு கூட்டம் தோழர்கள் ராஜமாணிக்கம் மற்றும் ராஜாராம் மனோகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஆய் படு பொருளை சமர்பித்து கிளைச்செயலர்கள் முத்துச்சாமி , கருப்பசாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை அதன் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் பேசினார் .அதன் பின் மாவட்ட செயலர் ரவீந்திரன் தொகுப்புரை வழங்கினார் . கிளைப் பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் ' முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக 2 ம் தவணையாக ரூ .4400 ஐ தோழர் முத்துச்சாமி OCB கிளை சார்பாகவும் ,சிவகாசி ஒப்பந்த ஊழியர் கிளை ரூ .1001 ம் வழங்கினார்கள். தொடர்ந்து ரோடு ஷோகளை வெற்றிகரமாக நடத்தும் இரண்டு கிளைகளுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டை தெரிவித்தது .கிளை கூட்டங்களில் ஊழியர்களை முழுமையாக பங்கேற்க செய்ய அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
Monday, January 16, 2017
மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக
மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் ! தமிழகத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது. மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
Wednesday, January 11, 2017
மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்
நேற்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்றனர் .சாத்தூர் மற்றும் விருதுநகர் ப்குதியில் 400 சிம்களும் ,சிவகாசியில் 400 சிமகளும்,ராஜபாளையம் ப்குதியில் 375 சிம்களும் ,அருப்புக்கோட்டை பகுதியில் 62 சிம்களும் என ஒட்டு மொத்தமாக 1200 க்கும் மேற்பட்ட சிமகள் ஒரே நாளில் விற்கப்பட்டன .சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதி நமது தோழர்கள் தொடர்ந்து சிம் விற்பதில் சாதனை செய்து வருகின்றனர் .தோழியர்கள் பாண்டிச்செல்வி மற்றும் பாண்டியம்மாள் நேற்றைய மேளாவில் மாவட்ட செயலருடன் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் தோழர்கள் பொன்ராஜ் ,வெள்ளைப்பிள்ளையார் ,தியாகராஜன் ,பொன்னுசாமி ,அனவ்ரதம் ,வேலுச்சாமி ,முருகன் ,ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர் .அருப்புக்கோட்டையில் கிளை செயலர் மதிக்கண்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் அஷ்ரப்தீன் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .
Monday, January 9, 2017
Saturday, January 7, 2017
தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி
தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி
நெஞ்சை நெகிழவைத்த நிகழ்ச்சி
நமது அருமை தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு மற்றும் அவரது குடும்ப நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 300 மணி அளவில் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் முன்னணி வகித்து உரை நிகழ்த்தினார் .அதன் மாவட்ட செயலர் ரவீந்திரன் குஜராத் முதல் சோழபுரம் வரை அவர் சென்ற தடங்களை ,தொழிற்சங்க இயக்கங்களில் அவரின் பங்களிப்பை குறிப்பாக அகில இந்திய மாநாடு நடைபெற்ற லூதியானா ,கொல்கொத்தா ,அஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு ,டெல்லி பேரணியில் ,JTO பயிற்சியின் போது கூட 8 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டத்தில் பங்கேற்றது .BSNLEU ஊழியர் சங்கம் தனது ஊழியர்களை என்றும் கைவிடாது என்பதை நிரூபிக்கும் முகமாய் 31/12/2016 அன்று மாவட்ட சங்கம் அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யுமாறு குறும் தகவல் அனுப்பியது .1 வார காலத்தில் நமது ஊழியர்கள் களத்தில் இறங்கி 1,90,951 ரூபாய் வசூல் செய்தனர் .குறிப்பாக ராஜபாளையம் தோழர்கள் 1,18,000 ரூபாய் வசூல் செய்து உள்ளனர் .தோழர் முத்துராமலிங்கம் அனைத்து ஊழியர்களிடம் இன்முகமாய் பழகியது, நிர்வாக ரீதியில் ராஜபாளையம குரூப்ஸ் பகுதியில் சிறந்த சேவை செய்தது அனைத்து தரப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அனைவரையும் தங்களது பங்களிப்பை செய்ய வைத்து உள்ளது .தோழரை நினைவு கூர்ந்து தோழர்கள் மதி கண்ணன் ,முத்துசாமி,கேசவன் ,SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் ,ராஜபாளையம் கிளை செயலர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகி அனவ்ரதம் ,தோழர்கள் வெள்ளைப்பிள்ளையார் ,ஷண்முககுமார் ஆகியோர் பேசினர் .அதன் பின் தோழரின் திரு உருவ படத்தைSNEA மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் திறந்து வைத்தார் .அவர் கண்ணீர் மல்க உரைநிகழ்த்த அனைவரும் கலங்கினர் .தோழர் K .R.கிருஷ்ணகுமார் மறைந்த தோழனுக்கு கவிதாஞ்சலி செலுத்தினார் .அதன் பின் அனைவரும் வழங்கிய ரூபாய் 1,90,951 ஐ முத்துராமலிங்கம் துணைவியாரிடம் மாவட்ட சங்கம் முதல் தவணையாக வழங்கியது .தோழியர்க்கு வரக்கூடிய பண பலன்கள் மற்றும் கருணை அடிப்படையில் ஆன வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெற நமது மத்திய ,மற்றும் மாநில சங்கங்கள் உரிய துணை புரியும் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...