Sunday, June 26, 2016

தொடங்கியது 8 வது மாவட்ட மாநாடு

     விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர்சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாடு இன்று இனிதே தொடங்கியது.மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை வகிக்க மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய்படு பொருள் ஏற்று கொள்ளப்பட்டு, தோழர் முத்துசாமி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, தலைவர் உரையுடன் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் அமர்வு தொடங்கியது. முறையாக பிரதிநிதிகள் அமர்வை மாநில அமைப்பு செயலர் தோழர் கிறிஸ்டோபர் தொடக்கி வைத்து 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் பெற்ற பிரமாண்டமான வெற்றி, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, நாம் நிறுவனத்தை மேம்படுத்த நடத்தி கொண்டு உள்ள நடவடிக்கைகள், செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 வது முறையாக வெற்றி பெற்றது மட்டும் இன்றி இந்த 7 வது சரிபார்ப்பு தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக 50% வாக்குகள் மேல் பெற்று வெற்றி பெற்றதை பாராட்டினார். நமது ஆண்டறிக்கையில் மார்க்கெட்டிங் பணிகளுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வரவேற்றார். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சமர்ப்பித்த ஆண்டறிக்கை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. தோழர் வெங்கடப்பன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை மாவட்ட மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 21 பிரதிநிதிகளும், மாவட்ட சங்க நிர்வாகிகளில் 18 பேரும், பார்வையாளர்களாக 8 பேரும், AIBDPA சார்பாக தோழர் புளுகாண்டியும் கலந்து கொண்டனர்.
இன்றைய முடிவுகள் :-
1. மாவட்ட மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிக்கு அனைவரும்  குடும்பத்தோடு கலந்து கொள்வது.
2. செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நமது மாவட்டத்தில் நடத்துவது. 
3. தொழிற்சங்க பயிற்சி வகுப்பை இயற்கை எழில் சூழ்ந்த அச்சன்கோவிலில் வரும் 2016 ஆகஸ்ட் மாதம் நடத்துவது.இதற்கான பொறுப்பை சென்னை RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் மேற்கொள்வது.  
4. வரும் நவம்பர் மாதம் தோழர் செல்வராஜ் பணி ஓய்வு விழாவை ஒரு கலை இலக்கிய ,குடும்ப விழாவாக நடத்த தோழர் செல்வராஜ் அவர்களிடம் ஒப்புதல் கேட்பது. 
5. ஸ்ரீவில்லிபுத்தூர் தோழியர் பகவதி அவர்கள் பணி ஓய்வு பாராட்டு விழாவை ஒரு விரிவடைந்த செயற்குழுவாக மற்றும் செப்டம்பர் 2 வேலை நிறுத்த ஆயுத்த கூட்டமாக நடத்த  வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த ஒப்புதல் கேட்பது 
6. இனி வரும் காலங்களில் செயற்குழு கூட்டங்களை முழு நாளாக நடத்த வேண்டும்.
7. அனைத்திந்திய மாநாட்டு நன்கொடையாக வரும் 29 ஆம் தேதி 90,000/- ரூபாயாக கொடுத்து விடுவது .( ஏற்கனவே ரூபாய் 70,000/- வழங்கி விட்டோம்). இலக்கை முடிக்க அனைத்து கிளைகளும் ஒப்புதல் வழங்கி உள்ளன.
8. 21-06-2016,22-06-2016 இரண்டு நாட்கள் நமது தோழர்கள் பங்கேற்ற மார்க்கெட்டிங் பணிகள் பாராட்டப்பட்டது. 




















No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...