13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு 13-06-2016 அன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாக தோழர் வெங்கடசாமி, கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது. தோழர் .ரவிச்சந்திரன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் தியாகிகளுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். ஆண்டறிக்கை சமர்ப்பித்து கிளை செயலர் தோழர் சமுத்திரம் பேசினார் .கிளையின் வரவு செலவு அறிக்கை தோழர் சுந்தர மகாலிங்கம் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. விவாதத்திற்கு பின் ஆண்டறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை ஏற்று கொள்ளப்பட்டது. முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். வாழ்த்துரையாக தோழர்கள் சமுத்திரகனி, மாவட்ட தலைவர், கண்ணன், மாவட்ட உதவி தலைவர், முத்துசாமி, மாவட்ட உதவி செயலர், அஷ்ரப்தீன், மாவட்ட உதவி செயலர், L.தங்கதுரை, LCM உறுப்பினர், கிளை செயலர்கள் தோழர்கள் முத்துராமலிங்கம். காதர் மொய்தீன், கருப்பசாமி, ஓய்வூதியர் சங்கம் தோழர் புளுகாண்டி, SNEA மாநில அமைப்பு செயலர் தோழர் கோவிந்தராஜன், SDO, தோழர் வெங்கடேஷ் JTO, SNEA, மாவட்ட உதவி செயலர் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் வெங்கடசாமி, சமுத்திரம், சுந்தர மகாலிங்கம் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்க பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment