7 வது சரிபார்ப்பு தேர்தலில் தொடர்ந்து 4 வது முறையாக விருதுநகர் மாவட்டத்தில் BSNLEU சங்கம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .அதுவும் 54 ஓட்டுகள் வித்தியாசத்தில் NFTE சங்கத்தை தோற்கடித்துள்ளது .இது ஒரு சாதனை வெற்றி .இந்த வெற்றிக்கு பாடுபட்ட நமது சங்க நிர்வாகிகள் ,கிளை செயலர்கள் , முன்னணி தோழர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் தோழர் .V .பரமேஸ்வரன் ,தோழர் S .குருசாமி ,தோழர் .S .கேசவன் , SNATTA சங்க தோழர் R .கோபிநாத் அவர்களுக்கும் ,காசு கொடுத்து வாக்கை விலைக்கு வாங்க எண்ணியவர்களுக்கு இந்த மாவட்டத்தில் இடம் இல்லை என்பதை நிராகரித்த நமது ஊழியர்களுக்கும் ,இந்த தேர்தல் பணியில் நடு நிலையோடு அற்புத பணி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் , காவல் பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கும் மாவட்ட சங்கம் தன் நன்றியை தெரிவித்து கொள்கிறது .அதே நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் NFTE சங்கத்திற்கு வாக்களிக்க வற்புறுத்திய SDE (G ) அவர்களை மாவட்ட சங்கம் வன்மையாக கண்டிக்கிறது .நடு நிலை தவறினால் மாவட்ட சங்கம் களம் காணும் .
மொத்த ஓட்டுகள் = 403
பதிவானவை = 396
BSNLEU = 220
NFTE = 166
வாழ்த்துகள் சகோதரா ஆனால் எங்கள் சகோதரர்களை தயவு செய்து விமர்சனம் செய்ய வேண்டாம்
ReplyDelete