நமது அஞ்சலி BSNLEU சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் முன்னாள் செயலரும் நமது மாவட்ட சங்க நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்த அன்பு தோழர் K .சமுத்திரம் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார் அவருக்கு நமது மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம் .
Tuesday, October 15, 2019
Thursday, October 10, 2019
9 வது மாவட்ட செயற்குழு
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி முறையாக மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலர் சமர்பித்த ஆய்வறிக்கை மீது விரிவான விவாதம் நடைபெற்றது . பிரச்சனைகளை தொகுத்து மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் பேசினார் . விவாத குறிப்பின் மேல் நடைபெற்ற விவாததிற்கு மாவட்ட செயலர் பதிலளித்தார் . தொகுக்கப்பட்ட பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பித்து உரிய தேதியை கேட்டு முதன்மை பொதுமேலாளரை பேட்டி காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது .லோக்கல் கவுன்ஸில் உறுப்பினர்களாக தோழர்கள் ரவீந்திரன் , சமுத்திரகனி , ஜெயக்குமார் , கணேசமூர்த்தி , இளமாறன் , காதர்மொய்தீன் , தங்கதுரை மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் .ராஜபாளையம் தோழர் பிச்சை அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்றைய மாவட்ட செயற்குழுவில் நடைபெற்றது .தோழரின் சேவைகளை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் கண்ணன் மற்றும் வெள்ளை பிள்ளையார் ,தோழர் பொன்ராஜ் மற்றும் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
Wednesday, October 9, 2019
07.10.2019 அன்று நடைபெற்ற UAB கூட்ட முடிவுகள்
7.10.2019 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNLEU, SENA, AIBSNLEA, AIGETOA, FNTO, BSNL MS, AIBSNL OA, BSNL ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கு பெற்றனர். அந்தக் கூட்டத்திற்கு SNEA சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் வழங்காதது, மின் கட்டணம் கட்டாதது, மேலும் BSNLன் புத்தாக்கம் ஆகிய பிரச்சனைகளை அந்தக் கூட்டம் பரிசீலித்தது. மேலும் கால தாமதப்படுத்தாமல் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசிய தேவை உள்ளதென இந்தக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டம் மற்றும் பிரச்சாரங்களின் பல்வேறு வடிவங்களும் இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, இதர சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு அடுத்த கட்ட இயக்கங்களை 11.10.2019 அன்று அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 வது மாவட்ட செயற்குழு கூட்டம்
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :-
1. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு ஓர் ஆய்வு .
2. லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு
3.லோக்கல் கவுன்சில்லில் கொடுக்க படவேண்டிய பிரச்சனைகள்
4. ஸ்தல மட்ட பிரச்சனைகள்
5.ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
6. பணி நிறைவு பாராட்டு
7. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...