காக்கிவாடான்பட்டியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக செக்யூரிட்டி பணி செய்த திருநாராயணன் என்ற ஊழியரை எந்தவித தகவலும் இன்றி பணி நீக்கம் செய்து புதிதாக ஒரு ஊழியரை (அதுவும் காலையில் ஓட்டுநராகவும் இரவில் செக்யூரிட்டி ஆகவும் இரட்டை பணி) அதுவும் குற்ற பின்னணி உள்ளவரை பணிக்கு அமர்த்திய மல்லி செக்யூரிட்டி நிறுவனத்தின் அடாவடி போக்கை பல முறை நிர்வாகத்தோடு பேசியும் நிர்வாகம் அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்யும் போக்கை கண்டித்து மாவட்ட செயலர் வரும் 10 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளார் . இப் பிரச்சனையை மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .ஏற்கனவே இந்த நிறுவனம் இன்னோவேடிவ் நிறுவனம் போல் ஊழியர்களுக்கான EPF ,ESI பணத்தை முறையாக செலுத்தாததால் நாகர்கோயில் மாவட்டத்தில் show cause நோட்டீஸ் இந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது . எல்லாம் தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் மௌனம் காப்பது யாரை காப்பாற்ற என்று தெரியவில்லை .
தொடர் உண்ணாவிரத போராட்டம்
10/01/2019 காலை 1000 மணி
அணி திரள்வோம் . மல்லி செக்யூரிட்டி நிறுவனத்தின் அடாவடி போக்கை கண்டித்து
No comments:
Post a Comment