AUAB முடிவின்படி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நமது விருதுநகர் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் , SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,AIGETOA மாநில நிர்வாகி தோழர் சாம்சன் ,TEPU மாவட்ட செயலர் தோழர் சரவணன் ,BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜெயக்குமார்,சந்திரசேகரன்,மாரியப்பா ,பாஸ்கரன் ,கிருஷ்ணகுமார் உட்பட பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் பங்கேற்றனர் . 16 இக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், தனியார் சேனல்கள் இந்த பேட்டியில் பங்கேற்றனர் .இதே போல் சிவகாசியிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது .
Tuesday, October 30, 2018
AUAB
அகில இந்திய அளவில் AUAB எடுத்த முடிவின் படி விருதுநகர் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார் .இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் , SNEA மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜன் ,AIGETOA மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,விருதுநகர் JCTU செயலர் தோழர் தேனி வசந்தன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .
Sunday, October 28, 2018
போராட்ட களத்தை நோக்கி
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கோட்ட பகுதியில் நடக்கும் அத்துணை விஷயங்களும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் கூட அதை சரி செய்வதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும் ,மருத்தவ தேவை அடிப்படையில் கேட்டக்கூடிய மாறுதல்களை கூட பல்வேறு விளக்கங்கள் கூறிய பிறகும் கூட தவறான போக்கை கையாளும் மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து கீழ் கண்ட போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன .
1.மாவட்டம் முழுவதும் 29/10/2018 முதல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவது .
2.நிர்வாகம் நடத்தும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்பது .
3.உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் தொடங்குவது .
தோழமையுடன்
மாவட்ட செயலர்
இணைந்தோரை வரவேற்போம்
BSNL நிறுவனத்தை காத்திட தொடர்ந்து போராடி வரும் நமது BSNLEU சங்கத்தின் செயல்பாடுகளை உணர்ந்து நமது சங்கத்தில் இணைந்த ராஜபாளையம் கிளை செயலர் தோழர் வேலுச்சாமி அவர்களையும் தளவாய்புரம் தோழர் சந்தானம் அவர்களையும் ,ராஜபாளையம் தோழர் ஜான்சன் அவர்களையும் BSNLEU ,விருதுநகர் மாவட்ட சங்கம் தோழமையுடன் வரவேற்று அவர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது .
Saturday, October 27, 2018
14 வது இணைந்த ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளின் கூட்டு மாநாடு
14 வது இணைந்த ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகளின் கூட்டு மாநாடு இன்று (27/10/2018) அதன் தலைவர் தோழர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் மிகவும் எழுச்சியுடன் அய்யனார் அருவி கரையோரம் நடைபெற்றது . ஒரு மினி மாவட்ட மாநாடு போல் நடைபெற்ற இம் மாநாட்டு பணிகளை ராஜபாளையம் தோழர்கள் குறிப்பாக தோழர் வெள்ளைப்பிள்ளையார் ,பொன்ராஜ் ,ராதாகிருஷ்ணன் ,பொன்னுச்சாமி ,ரவிச்சந்திரன் ,வேலுச்சாமி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தலைமையில் மிகவும் கட்டுப்பாட்டுடன் ,செய்தது பாராட்ட தக்கது .நமது சங்க கொடியை கிளையின் மூத்த தோழர் பிச்சை விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றினார் .ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை தோழியர் மாரியம்மாள் ஏற்றிவைத்தார் .அதன் பின் கிளை தலைவர் தோழர் தியாகராஜன் தலைமை உரைநிகழ்த்த ,அஞ்சலி தீர்மானத்தை தோழர் முருகன் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் கிளை செயலர்கள் தோழர்கள் பொன்ராஜ் மற்றும் தங்கதுரை ஆகியோர் ஆய்படு பொருளை சமர்ப்பித்து வரவேற்புரை நிகழ்த்தினர் .அதன் பின் முறையாக மாவட்ட செயலர் மாவட்டத்தின் பிரச்சனைகள் தொகுத்து வழங்கி மாநாட்டை முறையாக துவக்கி வைத்தார் ,அதன் பின் சிறப்புரையாக தோழர் K.பழனிக்குமார் அரசின் கொள்கைகள் ,மற்றும் ஊதிய மாற்றம் பெறுவதற்கு நாம் தலைமை தாங்கி நடத்தும் போராட்டங்கள் ,அதை தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையின் சாராம்சங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார் .அதன் பின் கிளை மாநாட்டை வாழ்த்தி நமது மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு மற்றும் கோட்ட பொறியாளர் திரு தங்கவேல் ஆகியோர் பேசினர் .தோழர்கள் தியாகராஜன் ,ராதாகிருஷ்ணன் ,ரவிச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக ராஜபாளையம் கிளைக்கு தேர்ந்து எடுக்க பட்டனர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைக்கு தோழர்கள் ரவிச்சந்திரன் ,வெங்கடசாமி ,தங்கதுரை ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக தேர்வு செய்யப்பட்டனர் .புதிய கிளை செயலர்கள் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவு பெற்றது .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...