Wednesday, January 24, 2018

8 வது மாவட்ட செயற்குழு முடிவுகள்

 8 வது  மாவட்ட செயற்குழு முடிவுகள்
1,வர இருக்கின்ற  சத்தியாகிரக  போராட்டத்தை அந்தந்த ஊர்களில் எழுச்சியுடன் நடத்துவது .
2.டெல்லி பேரணிக்கு 5 தோழர்கள் செல்வது .அவர்களுக்கு மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 2000 வழங்குவது .
3.சிவகாசியில் இருந்து செல்லும் தோழர் ஒருவர்க்கு மாவட்ட சங்க நிர்வாகி தோழர் குருசாமி நிதி உதவி செய்வதாக கூறியுள்ளதற்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது .
4.மாவட்ட மாநாட்டை மே இறுதியில் மாநில சங்கம் சொல்லும் தேதியில் ராஜபாளையம் நகரில் தோழர் முத்துராமலிங்கம் நினைவாக நடத்துவது .மாவட்ட மாநாட்டு நிதியாக  ரூபாய் 300/- ஐ குறைந்தபட்ச  நிதியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது .நிதி கோட்டாவாக கிளை வாரியாக கீழ் கண்ட  நிதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது .
விருதுநகர் ---------------------- ரூபாய் 30,000
சிவகாசி -------------------------- ரூபாய் 50,000
ஸ்ரீவில்லிபுத்தூர் --------------ருபாய் 15,000
அருப்புக்கோட்டை -----------ரூபாய் 10,000
சாத்தூர் -----------------------------ரூபாய் 10,000
ராஜபாளையம் கிளை மாவட்ட மாநாட்டை நடத்தும் .அதற்கான வரவேற்பு குழு வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ராஜபாளையம் கிளை பொது குழுவில் உருவாக்கப்படும்.
5. ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை அதன் மாநில  சங்கம் எடுக்கும் முடிவுகளை ஒட்டி மாவட்ட சங்கம் கையாளும் .
6. காலியாக உள்ள இடங்களை நிரப்ப மற்றும் உபரி ஊழியர்கள் இருக்க கூடிய இடங்களை கண்டறிந்து அதற்கான கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பது .
 
 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...