30/05/2017 அன்று GM அலுவலக கிளை மற்றும் விருதுநகர் அவுட்டோர் கிளைகளின் இணைந்த 14 வது கூட்டு மாநாடு மற்றும் நமது மூத்த தோழர் G.சந்திரசேகரன் மற்றும் தோழியர் மங்கையற்கரசி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக பிரமாண்டமாக ஒரு மாவட்ட மாநாடு போல் நடைபெற்றது ..விருதுநகர் அவுட்டோர் கிளையின் தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமை வகித்தார் .அதிர் வேட்டுக்கள் வெடிக்க நமது சங்க கொடியை தோழர் சந்திரசேகரன் ஏற்றிவைத்தார் .கிளை பொருளாளர் தோழர் மாரியப்பா அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதன் பின் முறையாக மாவட்ட செயலர் கிளை மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார் .அவர் தம் உரையில் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக பொது துறைகளை .அழிக்கும் முயற்சியை உதாரணங்களுடன் விளக்கினார் .அதே நேரம் ஊதிய மாற்றத்திற்கான போராட்டத்தை இணைந்து நடத்த வேண்டிய கட்டாயத்தையும் கூறினார் .பணி ஓய்வு பெரும் தோழர்கள் சந்திரசேகரன் மற்றும் மங்கயற்கரசி அவர்கள் நமது சங்கத்தின் மீது கொண்ட அபிமானத்தையும் ,நடந்த போராட்டங்கள் அனைத்திலும் அவர்கள் முத்திரை பதித்த நிலையையும் ,,குப்தா அணியினரின் கொடுமையான தாக்குதல்களை எதிர்த்து கேஜி போஸ் அணியின் ஒரு வித்தாக இருந்த சந்திரசேகரின் தொழிற் சங்க செயல்பாடுகளை மாவட்ட செயலர் நினைவு கூர்ந்தார் .அதே போல் தோழியர் மங்கயற்கரசி அவர்கள் மாவட்ட சங்கத்திற்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்ததை சுட்டி காட்டினார் .சிறப்புரையாக தோழர் முருகையா ,தமிழ் மாநில உதவி செயலர் நமது சங்கம் கடந்து வந்த பாதைகளையும் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நீதிமன்றம் மூலமாக நமது மாவட்டத்தில் பணி நியமனம் 3 பேருக்கு பெற்று தருவதற்கு செய்த முயற்சிகளை கூறினார் .அதன் பின் சிறப்புரையாக அனைத்திந்திய உதவி செயலர் ,CCWF தோழர் C.பழனிச்சாமி பேசுகையில் புதிய ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பெற்று தந்தது ,பணியின் அடிப்படையில் ஊதியம் பெறுவதற்கான நமது முயற்சி ,.ஊதிய மாற்றத்திற்கான போராட்டம் ஆகியவற்றை விரிவாக பேசினார் .நமது மாவட்ட தலைவரும் ,மாநில அமைப்பு செயலருமான தோழர் சமுத்திரக்கனி இன்று மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை கூறி வாழ்த்துரை நிகழ்த்தினார் .பணி ஓய்வு பெரும் தோழர்களை வாழ்த்தி தோழர்கள் ஜெயக்குமார் ,AIBDPA மாநில பொறுப்பாளர் தோழர் பெருமாள்சாமி ,ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர் .இறுதியாக பணி ஓய்வு பெரும் தோழர்கள் ஏற்புரை நிகழ்த்தினர் .GM அலுவலக கிளை புதிய தலைவர் ,செயலர் ,பொருளர் ஆக தோழியர் தனலட்சுமி ,தோழர் இளமாறன் ,தோழர் மாரியப்பா ஆகியோர் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் . விருதுநகர் அவுட்டோர் கிளை புதிய தலைவர் ,செயலர் ,பொருளர் ஆக தோழர்கள் சிங்காரவேலு ,தோழர் மாரிமுத்து ,தோழர் லட்சுமணன் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் தோழர் லட்சுமணன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது .

































No comments:
Post a Comment