02/05/2017 அன்று தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசி விவாதக்குறிப்பை சமர்ப்பித்து பேசினார் .அதன் பின் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் பல்வேறு பிரச்சனைகள் மீது ஒரு விரிவான எழுச்சிகரமான உரை நிகழ்த்தினார் .மே தின தியாகிகளை நினைவு கூர்ந்து அந்த எட்டு மணி நேர போராட்டத்தின் வீச்சை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை ,மத்திய அரசு தொடந்து மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், ,ஊதிய மாற்றத்திற்கான நடவடிக்கைகள் ,JE மற்றும் TT தேர்வுகள் பற்றிய தகவல்கள் ,நமது நிறுவன புத்தாக்கம் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் என் அனைத்து விஷயங்களையும் விரிவாக கூறினார் .மே 19, 20 ஈரோட்டில் நடைபெற உள்ள 8 வது தமிழ் மாநில மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல்கள் ,மற்றும் சார்பாளர் எண்ணிக்கை மற்றும் சார்பாளர் கட்டணம் ஆகியவை முடிவு செய்யப்பட்டன .




No comments:
Post a Comment