இது ராஜா ராணி காலம் அல்ல
ராஜபாளையம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் SDE ஆக பணி புரியும் ஒருவர் வாடிக்கையாளர்களையும் மதிப்பது இல்லை ஊழியர்களையும் மதிப்பது இல்லை .குறிப்பாக மாற்று திறனாளி ஊழியரை அலைக்களிப்பது என்பது அவருடையை அன்றாட கடமை ஆகிவிட்டது .மாவட்ட நிர்வாகத்திற்கு நாம் பல கடிதங்கள் கொடுத்தும் வழக்கமான மீளா துயிலில் உள்ளது .பிரச்சனையின் தன்மையை மாவட்ட நிர்வாகம் புரிந்து கொண்ட மாதிரி இல்லை . தொடர்ந்து தவறு செய்யும் அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் 08-07-2015 அன்று ராஜபாளையத்தில் நடைபெறும் .ஒரு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி சேவை குறைபாடு செய்யும் அந்த அதிகாரியின் போக்கை நாட்டுக்கே தெரிய வைப்போம் .
இது ராஜா ராணி காலம் அல்ல என்பதை நிர்வாகத்திற்கு புரிய வைப்போம்
No comments:
Post a Comment