Wednesday, July 22, 2015

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம்






78.2 விழுக்காடு பஞ்சப்படி இணைப்பு உத்தரவை 10.6.2013க்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலந் தழுவிய தொடர் உண்ணாவிரதம் செவ்வாயன்று (ஜூலை 21) சென்னை மந்தைவெளி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தொடங்கியது.இப்போராட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப் படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.போராட்டத்திற்கு சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.மோகன்தாஸ், சென்னை தொலைபேசி மாநிலத் தலைவர் பி.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.பிஎஸ்என்எல்இயு அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.செல்லப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பிஎஸ்என்எல்இயு - சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜன், மத்திய-மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தலைவர் நெ.இல.சீதரன், பிஎஸ்என்எல் ஓய்வூதிய சங்க தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சி.கே.நரசிம்மன், சென்னை மாநிலச் செயலாளர் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் பேசினர்.இந்தப்போராட்டம் புதனன்றும் (ஜூலை 22) தொடர்ந்து நடைபெறுகிறது.
                            நன்றி :- தீக்கதிர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...