தமிழ் மாநில செயற்குழு மாநிலத் தலைவர் தோழர் செல்லப்பா அவர்கள் தலைமையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செயற்குழுவின் ஆய்படு பொருள்களாக
கையெழுத்து இயக்கம் மற்றும் பாராளுமன்றம் நோக்கிய பேரணி மீள்பார்வை
ஏப்ரல் 21, 22 வேலைநிறுத்தம் மீள் பார்வை
மாநில மற்றும் லோக்கல் கவுன்சில்கள் செயல்பாடுகள்
மாநில அளவிலான பிரச்சனைகள்
ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷயங்கள்
ஸ்தல மட்டப் போராட்டங்கள்
மேலும் சில தலைவர் அனுமதியுடன் ஆகியவை இருக்கின்றன.
மாநில செயற்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நமது சங்க கொடியை நமது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சி கோஷங்களுடன் ஏற்றி வைத்தார் . தோழர் மாநில உதவி தலைவர் தோழர் வெங்கட்ராமன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் . அதன் பின் தலைமையுரையாக நமது மாநில தலைவர் தோழர் செல்லப்பா அவர்கள் பேசினார் .பின்னர் மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து உரையாற்றிய நமது பொது செயலர் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டு தெரிவித்தார் .நிரந்தர ஊழியர்க்கு இணையாக ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில் இவ் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டது சிறப்புமிக்கது என அவர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார் . தற்போதய மத்திய அரசு நேரடி அந்நிய முதலீட்டை அதிக அளவில் அனுமதிப்பதின் நோக்கம் அந்நிய நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதிப்பது . அதற்க்கு தடைகளே இருக்க கூடாது என்பதற்காக தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தப்படுவது , விவசாயிகளிடம் நிலங்களை கையகலப்படுதுவது என்பது போன்ற மக்கள் விரோத மத்திய அரசின் கொளகைகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும் குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி 11 மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என் குறிப்பிட்டார் .ஜெர்மனியில் நடைபெற்ற ரயில்வே மற்றும் விமான பைலைட்டுகள் நிறுத்தத்தை அவர் உதாரணமாக கூறினார் . உயர் தொழில் நுட்ப ஏற்றுமதி வளர்ச்சியில் இந்தியா 23 வது இடத்தில உள்ளதையும் அதே நேரத்தில் சைனா முதல் இடத்தையும் ஜேர்மனி இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா மூன்றாம் இடத்தில உள்ளதையும் அவர் சுட்டி காட்டினார் .நமது நிறுவன புத்தாக்கத்திற்கு அனைவரும் நடத்திய 2 நாள் வேலை நிறுத்தம் அரசாங்கத்திடம் ஒரு தாக்கத்தை உருவாக்கி உள்ளதை சுட்டி கட்டிய அவர் கூடுதல் வருமான வரியாக பிடிக்கப்பட்ட 7000 கோடியை வருமான வரித்துறையிடம் இருந்து பெறுவதற்கான நடைமுறை தொடங்கி விட்டது என்றும் அதே போல் கிராமப்புற சேவைக்கு வர வேண்டிய USO நிதி 750 கோடி , DOT யில் உள்ள TERM CELL இல் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை BSNL கொடுத்ததற்கு DOT நமது BSNL க்கு 400 கோடி வழங்க உள்ளது . கிட்டதட்ட 15,000 கோடியை வழங்குவதற்கான முயற்சிகள் BSNL விரிவாக்கதிற்க்கு வழி வகுக்கும் என்றார் .BSNL ஐ MTNL நிறுவனத்தோடு இணைத்தால் நமது நிறுவனத்தை புனரமைப்பதற்கான சாத்தியமே இல்லை என்பதை குறிப்பிட்ட அவர் தற்போதைய போராட்டத்தால் அரசாங்கம் இணைப்பை தற்போது தவிர்க்க எண்ணியுள்ளது .1-1-2007 இல் பணி நியமனம் செய்யப்பட்ட TTA களுக்கு ஊதிய இழப்பை ஈடுகட்ட 1 கூடுதல் இன்கிரிமென்ட் நிலுவை தொகை இன்றி என்பது இப் போராட்டத்தின் விளைவால் நிலுவை தொகையோடு வழங்குவதற்கு போர்டு ஒப்புதலுக்கு சென்றுள்ளது .இப் பிரச்சனையில் அவர்களுக்கு 30% fixation வழங்கப்படவேண்டும் என்ற நமது கோரிக்கையை வென்று எடுக்க முயற்சிகள் தொடரும் . 01-01-2007 இல் இருந்து பணி நியமனம் பெற்ற SRTOA மற்றும் RM கேடர்களுக்கும் இதை அமல்படுத்த சங்கம் தொடர்ந்து முயற்சி எடுக்கும் என் அவர் கூறினார் .பதவி உயர்வு தேர்வுகளில் SC /ST ஒதுக்கீடு DOP வழிகாட்டல்களை அமல்படுத்தாத போக்கை களைய உரிய நடவடிகையை மத்திய சங்கம் எடுக்கும் என அவர் கூறினார் .அதன் பின் நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்த விவாத குறிப்புகளின் மீது விவாதம் தொடங்கியது .
No comments:
Post a Comment