நமது விருதுநகர் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (20-06-2014)மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் K.R.கிருஷ்ணகுமார் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க மாவட்ட செயலர் செயற்குழுவை தொடக்கி வைத்து ஆய்படு பொருளுக்கான விவாதத்தை முறையாக தொடக்கிவைத்தார்.
30-08-2014 அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவோடு இணைந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்களும், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர் தோழர் M.முருகையா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அருப்புகோட்டை துணை கோட்டத்தில் சுழல் மாற்றல் "TRANSFER POLICY" யில் கூறியுள்ளபடி நடைமுறைபடுத்தப்படவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தொழிற் சங்க பயிற்சி வகுப்பை ஜூலை மாதத்தில் குற்றாலத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நமது மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி அவர்கள் தமிழ் மாநில செயற்குழு எடுத்த முடிவுகளை மற்றும் தீர்மானங்களை விளக்கி விரிவாக பேசினார்.

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார். மாவட்ட பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றியுரை கூறி மாவட்ட செயற்குழுவை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment