கடந்த 2013-14ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டில் செயல்படும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் 5.7 சதவிகிதம் அதிகரித்து, ரூ.57,378 கோடியாக இருந்தது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் நெறியாளரான டிராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இதைத் தெரிவிக்கிறது.அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இந் நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் ரூ.54,283.78 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன் சேவை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் மட்டும் ரூ.55,164.18 கோடி. மீதமுள்ள வருவாயை இண்டர்நெட் சேவை மற்றும் தொலைதூர அழைப்புகளுக்கான சேவை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.இதில், பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக வருவாயாக ரூ.17,726 கோடியை இந்த 3 மாத காலத்தில் ஈட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.8,630.44 கோடியை ஈட்டியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.7,564.32 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.4,197.6 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ.3,348.21 கோடி, ஏர்செல் ரூ.3,041.83 கோடி, எம்.டி.என்.எல் ரூ.1,052 கோடி, யுனிநார் ரூ.1,049.57 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளன.விடியோகான் டெலிகாம் நிறுவனம் ரூ.378.43 கோடி, சிஸ்டிமா ஸ்யாம் ரூ.318.66 கோடி, லூப் மொபைல்ஸ் ரூ.121.99 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளன.
இந்த 3 மாத காலத்தில் மத்திய அரசு உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்டரம் சேவைக் கட்டணமாக ரூ.38,842.8 கோடியைப் பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் உரிமக் கட்டணமாக ரூ.3,110.71 கோடியைச் செலுத்தியுள்ளன. ஸ்பெக்ட்ரம் சேவைக்காக ரூ.1,442.94 கோடியைச் செலுத்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம் உரிமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சேவைக் கட்டணமாக ரூ.1,442.94 கோடியைச் செலுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல். ரூ.542.72 கோடியைச் செலுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<நன்றி : தினமணி >
No comments:
Post a Comment