இன்று பணி ஓய்வு பெறும் தூத்துக்குடி மாவட்ட செயலர் ராமரை விருதுநகர் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது
Monday, June 30, 2014
சிறப்புமிகு சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம்
சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் 30-06-2014 அன்று சிவகாசி தொலை பேசி நிலைய வளாகத்தில் தோழர்கள் அழகுராஜ் மற்றும் முனீஸ்வரன் கூட்டு தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது . விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவை 30-08-2014 அன்று சிவகாசியில் நடத்துவது. சிறப்புரையாக தோழர் V வெங்கட்ராமன் , மாநில துணை தலைவர் , தோழியர் V P இந்திரா , மாநில உதவி செயலர் , தோழர் லக்ஷ்மண பெருமாள் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியோரை அழைப்பது என முடிவு எடுக்கப்பட்டது .இதற்கு மாநில செயலரின் ஒப்புதலும் பெறப்பட்டது . மாநில செயற்குழு முடிவுகளையும் , விளக்கி மாவட்ட செயலர் விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் ஸ்தல மட்ட பிரச்சனைகளை நாம் கையாண்ட விதம் பற்றி எடுத்துரைத்தார் . பிரச்சனைகளை தோழர் ராஜு ,ராஜையா , செல்வராஜூ ஆகியோர் எடுத்துரைத்தனர் . தோழர் இன்பராஜ் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் முடிந்தது .
மேற்கு வங்கத்தில் ஒரு ஆணவ மற்றும் தரங்கெட்ட பேச்சு
எதிர்க்கட்சி பெண்களை பலாத்காரம் செய்வோம்: திரிணாமுல் எம்.பி. பகிரங்க மிரட்டலால் பரபரப்பு :செய்தி படிக்க :-Click Here
Sunday, June 29, 2014
Marginal increase in broadband subscribers between March and April 2014
There was an increase of a marginal 1.45 per cent in the number of broadband subscribers between March and April this year, according to the Telecom Regulatory Authority of India (TRAI) report.The total number of subscribers went up from 60.87 million to 61.74 million in all segments: wired subscribers, mobile device users (Phones + Dongles), and fixed wireless (Wi-Fi, Wi-Max, Point-to-Point Radio & VSAT).The largest change of 2.5 per cent was seen in the fixed wireless segment, while there was a change of 1.78 per cent in the mobile users and just 0.34 per cent in the wired subscribers.The top five broadband service providers constitute 83.65 per cent market share of total broadband subscribers at the end of April. They are BSNL (16.94 million), Bharti (12.84 million), Idea (7.45 million), Vodafone (7.26 million) and Reliance Communications Group (7.15 million).The top five Wired Broadband Service providers are BSNL (10.01 million), Bharti (1.38 million), MTNL (1.13 million), You Broadband (0.39 million) and Beam Telecom (0.38 million).The top five Wireless Broadband Service providers are Bharti (11.46 million), Idea (7.45 million), Vodafone (7.26 million), Reliance Communications Group (7.04 million) and BSNL (6.93 Million).
பேச்சுவார்த்தையின் அம்சங்கள்
27-06-2014 அன்று இயக்குனர் (மனிதவளம்) அவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு நடத்திய பேச்சுவார்த்தையின் அம்சங்கள் :-
- 1.ஊதிய தேக்கம் :-
- RM ஊழியர்களுக்கு 78.2 IDA இணைப்பால் ஏற்பட்ட ஊதிய தேக்கத்தை களைய ஏற்கனவே ஊழியர் தரப்பு கூறிய ஆலோசனைகளின் படி தீர்க்க JAC நிர்வாகத்தை வலியுறுத்தியது .இயக்குனர் (மனிதவளம் ) அவர்கள் இப் பிரச்சனையை நிர்வாகம் புதிய கோணத்தில் தீர்க்க முயற்சி செய்யும் என உறுதி கூறினார்.
- 2. ஊதிய இழப்பு :-
- 01-01-2007 க்கு பின் பணிக்கு வந்த ஊழியர்களின் ஊதிய குறைப்பை ஈடு செய்ய ஒரு இன்ரிமென்ட் வழங்குவது என்ற நிர்வாகத்தின் முடிவை JAC ஏற்று கொள்ள மறுத்துவிட்டது .மேலும் இப் பிரச்சனையில் மற்ற பொது துறை நிறுவனங்கள் வழங்கியது போல் 01-01-2007 முதல் 07-05-2010 வரை பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 30% ஊதிய நிர்ணயம் செய்ய JAC வலியுறுத்தி உள்ளது . இது விசயமாக நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையை JAC சிறிது காலம் பொறுதிருந்து மேல் நடவடிக்கை எடுக்கும்.
- 3.PLI :-
- ஒரு நீண்ட நெடிய விவாததிற்கு பின் PLI கணக்கிட தனி நபர் உற்பத்தி திறனை மதிப்பீட்டில் கொள்ளாமல் தேசிய அளவில் மதிப்பீடு செய்ய இரண்டு மாத கால அவகாசத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ் விஷயம் 23-07-2014 அன்று நடைபெற உள்ள PLI கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
- 4.NEPP :-
- 01-10-2000 க்கு பிறகும் , புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்கத்திற்கு முன்பும் post based பதவி உயர்வு பெற்றதை முதல் பதவி உயர்வாக கொள்ள கூடாது என்ற JAC கூறியதை பரிசிலனை செய்ய நிர்வாகம் ஒத்து கொண்டது .
- 7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள்அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவிஉயர்வாகப்பெறலாம். இது TTA/DRIVER மற்றும் LDC/TOA மாறுதல்செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.
- 5.பரிவு அடிப்படையில் ஆன பணி நியமனம் :
- நிர்வாகம் இப் பிரச்னையில் தங்கள் கரங்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் கட்டப்பட்டு உள்ளன என்பதால் விதிகளை தளர்த்தி பணி நியமனம் செய்ய முடியவில்லை என்று மீண்டும் இதே பதிலை கூறியுள்ளது .கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றதை JAC நிர்வாகத்திடம் சுட்டி காட்டியுள்ளது . இக் குறைபாட்டை களைய வெயிட்டேஜ் பாயிண்ட் கணக்கிடும் முறையில் விரைவில் மாற்றம் செய்யப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது .
- 6.LTC (LTC விடுப்பை காசாக்குவது) மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் :-
- நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதை நிர்வாகம் சுட்டி காட்டி இக் கோரிக்கையை ஏற்று கொள்ள மறுத்து விட்டது.
- 7. E 1 சம்பள விகிதம் அமலாக்கம் :-
- இப் பிரச்னை தற்போது BSNL போர்டு முன் உள்ளதாகவும் அடுத்து நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலாக்கப்படும் என நிர்வாகம் உறுதி கூறி உள்ளது .
- 8.கேடர் பெயர் மாற்றம் :-
- 23-07-2014 அன்று இதற்கென அமைக்கப்பட்ட கூட்டு கமிட்டி கூடவுள்ளது .கூடிய விரைவில் கேடர் பெயர் மாற்றம் அமலாக்கப்படும் .
- 9. Regular Promotion of the officiating JTOs:-
- இப் பிரச்னை தற்போது BSNL போர்டு முன் உள்ளதாகவும் அடுத்து நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இப் பிரச்னை தீர்க்கப்படும் .
- 10. SC /ST ஊழியர்களுக்கு தகுதி மதிப்பெண் தளர்த்துவது :-
- இது விசயமாக் DoP &T உத்தரவுகள் அமலாகுவது இல்லை என்பதை JAC சுட்டி காட்டி நிர்வாகத்திடம் கடுமையாக கூறியது .DIR (HR ) இது விசயமாக தேவையானதை செய்வதாக உறுதி கூறியுள்ளார் .
- 11.30% Superannuation Benefits to the Directly Appointed Employees:-
- நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
- 12. Review of JTO and JAO results :-
- JAO தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க நிர்வாகம் மீண்டும் மறுத்து விட்டது . JTO கேள்வி தாளில் உள்ள தவறுகளை களைய சென்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அனைத்து பொது மேலாளர்களுக்கு கடிதம் அனுப்பாமல் உள்ளதை JAC சுட்டி காட்டியதை நிர்வாகம் உடனடியாக கடிதம் அனுப்ப ஒத்து கொண்டது .
- 13.புதிய ஆளெடுப்பு :-
- இந்த பிரச்னை விசயமாக ஒரு ஆலோசனை நிறுவனத்திடம் கருத்து கேட்கப்படும் .
- 14. விடுபட்ட தற்காலிக ஊழியர் நிரந்தரம் :-நிர்வாகம் இக் கோரிக்கையை உச்ச நீதி மன்ற உத்தரவை கூறி ஏற்க மறுத்து விட்டது .
- 15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் EPF/ESI பிரச்னை :-
- பல மாநிலங்களில் கார்பரேட் அலுவலக உத்தரவுகள் இது விசயமாக அமலாவது இல்லை என்பதை JAC சுட்டி காட்டியது .DIR (HR ) இப் பிரச்னை விசயமாக மாநில நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார் .
- 16. Permitting the Non-Executives to appear Management Trainee Exam:-
- 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின்படி முதல் பரிட்சைக்கு பின் Management Trainee ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்ய பரிசீலிக்கப் படும் .
- 17. Promotion based on personal up gradation of the officials who had completed Telecom Mechanic Training.:-
- நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
- 18. Revision of the wages of the TSMs based on IDA payscales.
- நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது .ஆனால் CDA ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்வதிலும் சரியான நடை முறை இல்லாததை JAC சுட்டி காட்டியதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ளும் என உறுதி கூறியுள்ளது .
- 19. Filling up of SC/ST backlog vacancies:-
- இது விசயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஒத்து கொண்டுள்ளது .
- 20. முதல் சம்பள மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலி :-
- இப் பிரச்னை DOT ஒப்புதலுக்கு சென்றுள்ளது .
- 21.பணியில் உள்ள ஊழியர்களுக்கு 78.2% IDA இணைப்பால் கிடைக்க வேண்டிய நிலுவை தொகை :
- இப் பிரச்னை விசயமாக DOT க்கு நமது கார்பரேட் அலுவலகம் DO கடிதத்தை DOT க்கு அனுப்பி உள்ளது .மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் DOT க்கு நிர்வாகத்தால் அனுப்பப்படும் .
- 22. விடுபட்ட அனைவர்க்கும் ப்ரீ சிம் :-
- BSNL நிர்வாக கமிட்டியில் இது ஒப்புதல் பெறப்பட்டு விட்டது .இன்னும் ஓரிரு தினங்களில் உத்தரவு வெளியிடப்பட்டு விடும் என நிர்வாகம் கூறியுள்ளது .
- 23. அலவன்சுகளை உயர்த்துவது :-
- நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதை நிர்வாகம் சுட்டி காட்டி இக் கோரிக்கையை ஏற்று கொள்ள மறுத்து விட்டது.
- 24.78.2% IDA இணைப்பு அடிப்படையில் பென்சனை உயர்த்துவது :-
- இப் பிரச்சனை DOT யிடம் நிலுவையில் உள்ளது .
- 25. JTO /JAO/TTA/TM தேர்வுகளில் பங்கெடுக்க தகுதியை தளர்த்துவது
- கார்பரேட் நிர்வாகம் இது விசயமாக ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து கொண்டு உள்ளது என தெரிவித்து உள்ளது .
- 26. Issuing of presidential orders to the employees whose training started during DoT period:-
- இப் பிரச்னை ஏற்கனவே DOT யின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுவிட்டது .மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் DOT க்கு நிர்வாகத்தால் அனுப்பப்படும் .
- 27.கால் சென்டர் பணிகளை நமது ஊழிய்ரகளிடம் வழங்குவது :-இவ் விசயத்தை பரிசீலிக்க நிர்வாகம் ஒத்து கொண்டு உள்ளது .
- 28.Option to the Non-Executives, for fixation of pay on promotion, on the date of next increment which fell after 01-10-2000.
- இப் பிரச்னை ஏற்கனவே DOT யின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுவிட்டது. இது விசயமாக சம்பள பிடித்தம் செய்வதை நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும் என JAC வலியுறுத்தியது . ED(Finance) விடுமுறையில் இருப்பதால் உத்தரவு வெளிய காலதாமதம் என்று நிர்வாகம் கூறியுள்ளது .
- 29. டெலிகாம் தொழிற்சாலை புத்தாக்கம் :-
- இது விசயமாக தேசிய கவுன்சிலில் கொடுக்கப்பட்ட திட்டங்கள் இதுவரை பரிசீ லிக்கப்படவில்லை என்பதை JAC சுட்டி காட்டியது .கொல்கத்தா டெலிகாம் பாக்டரியில் கிளிப் தொலைபேசிகள் உற்பத்தியில் காலதாமதம் ஆவது சுட்டி காட்டப்பட்டது . இப் பிரச்சனை ED(NB) அவர்களுடன் மேலும் விவாதிக்கப்படும் .
- 30. Revision of the payscales of the cadres of Sr.TOA, Telecom Mechanic, Driver, etc :-
- இவ் விசயமாக விவாதிக்க கமிட்டிகள் உருவாக்கப்பட்டு இப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க JAC கேட்டு கொண்டது. நிர்வாகம் இதற்கு ஒத்து கொண்டது .
Friday, June 27, 2014
Thursday, June 26, 2014
GSM mobile users grow to over 300M in rural India
Private operators had 89.44 per cent share of the rural telephony market, with BSNL accounting for the balance 10.56 per cent.Rural subscriber base for GSM telephony services grew marginally to 300.63 million users in May this year compared to the previous month, industry body COAI said today.The all-India GSM rural subscriber figures grew 1.1 per cent with the addition of 3.47 million new subscribers from a user base of 297.16 million in April, according to the data released by Cellular Operators' Association of India (COAI).The country's largest telecom operator Airtel added the highest number of subscribers in May at 1.43 million, taking its rural user base to 96.18 million.UP (East) had the highest number of subscribers in the rural region (32.29 million), and also it recorded the highest addition of 888,563 users in May 2014.According to sectoral regulator TRAI, total number of rural subscribers stood at 377.73 million as of March 2014.Rural users accounted for 40.49 per cent of total telephony base in India.Of these, 371.78 million were wireless customers, while the remaining 5.96 million were wireline users.Rural teledensity (number of telephones per 100 people) was 43.96, the Telecom Regulatory Authority of India (TRAI) said.TRAI further said private operators had a share of 89.44 per cent of the rural telephony market, while public operator BSNL had 10.56 per cent share.The other public telecom operator, MTNL, operates in only two metro cities of Delhi and Mumbai.
Wednesday, June 25, 2014
ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கத் திட்டம்? - கமுக்கமாக ஒதுங்கும் விமானத்துறை அமைச்சர்
ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்திறன் சரியில்லைதான். ஆனால் அதை தனியார்மயமாக்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறினார்.மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடன்களும் அதிகரித்துவிட்டன. மத்திய அரசு அவ்வப்போது நிதி உதவி அளித்தும் கூட இதிலிருந்து அந்த நிறுவனம் மீளவே இல்லை.
இதனால் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க வேண்டும் என்று முன்பு எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கூறிவந்தது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்தது. அண்மையில் பிரதமர் மோடியை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து டெல்லியில் அசோக் கஜபதி ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், "ஏர் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் செயலாற்றல் திறன் போதுமானதாக இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. எனவே அதன் செயலாற்றலை வலுப்படுத்துவதற்கு நாங்கள் குறுகிய கால யுக்திகளை மேற்கொள்வோம். பிரதமருடான சந்திப்பின்போது ஏர் இந்தியா நிறுவனம் தொடர்பான அத்தனை பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனினும் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் நானாக ஏதும் சொல்லி குளவிக்கூட்டை கலைக்க விரும்பவில்லை. விமான எரிபொருள் மீதான விற்பனை வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இந்த வரியை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து பேசுவோம்," என்றார். இப்போதைக்கு, 100 நாட்களுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தை சீர்ப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்தார்.
<நன்றி ஒன் இந்தியா >27-06-2014 பேச்சு வார்த்தையில் BSNLEU பங்கேற்காது
2014 ஏப்ரல் 9 அன்று நிர்வாகிகளல்லாத ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு
30 அம்சக் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்தது. இந்த 30 அம்சக் கோரிக்கைகளில் அதிகபட்சமானவை
நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத எரியக்கூடிய பிரச்சனைகள் ஆகும்.
ஆச்சர்யமூட்டும் வகையில் கூட்டு நடவடிக்கைக் குழுவுடன் எந்தவிதமான
பேச்சு வார்த்தையும் நடத்துவதில்லை என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மாற்றாக
BSNLEU மற்றும் NFTE சங்கங்களை மட்டும 2014 ஜூன் 27 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
BSNLEUவின் அனைத்திந்திய மையம்
இம்மாதம் 20 அன்று சந்தித்து இந்தப் பிரச்சனையின் மீது விவாதித்தது. கூட்டு நடவடிக்கைக்குழு அழைக்கப்படாவிடில் ஜூன் 27ல் நடைபெறும் பேச்சு வார்த்தையில்
பங்கேற்காது என சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை நடைமுறைப்படுத்தும்விதமாக
BSNLEU நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. (கடித நகலுக்குஇங்கே அழுத்தவும்) NFTE சங்கமும் இதே முடிவை எடுக்கும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
Tuesday, June 24, 2014
அடேங்கப்பா
முன்னாள் அமைச்சர் கபில் சிபல் குடிபோகும் வீட்டின் ஒரு மாத வாடகையே ரூ.16 லட்சமாமே!!!! செய்தி படிக்க :-Click Here
அடிமை நான் ஆணையிடு ! ஆடுகிறேன் ! பாடுகிறேன் !
மானியங்களை குறைக்க வேண்டும்:
உலக வங்கி ஆலோசனை (உத்தரவு)
புதிதாக அமைந்திருக்கும் நரேந்திர மோடி அரசு தன்னுடைய முதல்
பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் சூழ்நிலையில் உலக வங்கி தன்னுடைய ஆலோசனையைத்
தெரிவித்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மானியங்களைக் குறைக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க புதிய வரிவிதிப்பு வழிகளை கண்டறிய வேண்டும்
என்று உலக வங்கி தன்னுடைய ஆலோசனையைத் தெரிவித்திருக்கிறது.மேலும், வரி விதிப்பு முறைகளை எளிமையாக்கி, வரிவரம்புகளைத் தளர்த்த வேண்டும் என்றார். அடுத்த மாத ஆரம்பத்தில்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
(நன்றி : தி இந்து தமிழ் நாளேடு 22-06-2014 )
கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு:கூடுதலாக ரூ.6,997 கோடி தேவை
குக்கிராமங்களுக்கும் தொலைத்தொடர்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற, மத்திய பட்ஜெட்டில் கூடுதலாக, 6,997 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிவேக இணையதள சேவைகளுக்காக, வரும் 2016-17ம் நிதியாண்டிற்குள், மொத்தம் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில், கண்ணாடி நாரிழை கம்பிவட ஒருங்கிணைப்பு வசதிகளை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு மேற்கண்ட வசதியை வழங்கும் திட்டமும் அடங்கும்.ஒன்பது மாநிலங்களில், நக்சல் பாதிப்பு பகுதிகளில், மொபைல் சேவை ஏற்படுத்த, 587 கோடியும், நகர்புறங்களில் தொலைத்தொடர்பு திட்டங்களை விரிவாக்க, 1,250 கோடியும் செலவாகும் என, தொலைத்தொடர்பு துறை மதிப்பிட்டுள்ளது.
< நன்றி யாகூ தினமலர் >
Monday, June 23, 2014
பேட்டி
- விடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ப்ரீ சிம் வழங்க நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்த பின்பும் உத்தரவு வெளியாகாமல் உள்ள பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும்.
- டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வில் 10 ஆம் வகுப்பு தகுதியை தளர்த்தவேண்டும்.
- Welfare போர்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கமிட்டி கூடாமல் உள்ள பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும்.
- JTO போட்டி தேர்வில் எக்ஸ் சர்வீஸ் மேன் சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நிர்வாக நீதி மன்றம் தந்த தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும்.
போன்ற பிரச்சனைகளை நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இன்று (23-06-2014) நமது உதவி பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரபோர்ட்டி அவர்களுடன் பொது மேலாளர் (ESTT) R.K.கோயல் மற்றும் பொது மேலாளர் (Admn) A.K.சிங்ஹால் அவர்களை சந்தித்து விவாதித்தார்.
Saturday, June 21, 2014
Friday, June 20, 2014
ரயில் கட்டணம் கடும் உயர்வு: பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு
நாட்டு மக்களுக்கோர் ஒரு நற்செய்தி
மத்திய ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்ற முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா ரயில் கட்டணம் பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்த பிறகு உயர்த்தப்படும் என்றார். இதையடுத்து ரயில் கட்டணம் ஜூன் 20ம் தேதி அன்று 14 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.அதன்படி இன்று ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ரயில் கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளது மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. இந்நிலையில் ரயில் கட்டணம் வேறு கடுமையாக உயர்ந்துள்ளது.
சிறப்பு மாவட்ட செயற்குழு
நமது விருதுநகர் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (20-06-2014)மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் K.R.கிருஷ்ணகுமார் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க மாவட்ட செயலர் செயற்குழுவை தொடக்கி வைத்து ஆய்படு பொருளுக்கான விவாதத்தை முறையாக தொடக்கிவைத்தார்.
30-08-2014 அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவோடு இணைந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்களும், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர் தோழர் M.முருகையா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அருப்புகோட்டை துணை கோட்டத்தில் சுழல் மாற்றல் "TRANSFER POLICY" யில் கூறியுள்ளபடி நடைமுறைபடுத்தப்படவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தொழிற் சங்க பயிற்சி வகுப்பை ஜூலை மாதத்தில் குற்றாலத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நமது மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி அவர்கள் தமிழ் மாநில செயற்குழு எடுத்த முடிவுகளை மற்றும் தீர்மானங்களை விளக்கி விரிவாக பேசினார்.
30-08-2014 அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவோடு இணைந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்களும், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர் தோழர் M.முருகையா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அருப்புகோட்டை துணை கோட்டத்தில் சுழல் மாற்றல் "TRANSFER POLICY" யில் கூறியுள்ளபடி நடைமுறைபடுத்தப்படவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தொழிற் சங்க பயிற்சி வகுப்பை ஜூலை மாதத்தில் குற்றாலத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நமது மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி அவர்கள் தமிழ் மாநில செயற்குழு எடுத்த முடிவுகளை மற்றும் தீர்மானங்களை விளக்கி விரிவாக பேசினார்.
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார். மாவட்ட பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றியுரை கூறி மாவட்ட செயற்குழுவை நிறைவு செய்தார்.
Thursday, June 19, 2014
சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
நமது சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 20-06-2014 வெள்ளிகிழமை அன்று மதியம் 3 மணி அளவில் நமது சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
நமது சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 20-06-2014 வெள்ளிகிழமை அன்று மதியம் 3 மணி அளவில் நமது சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆய்படு பொருள்
1. மாநில செயற்குழு முடிவுகள்
2. அருப்புகோட்டை சுழல் மாற்றல்
3. 30-08-2014 நடைபெற உள்ள விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழர் செல்வராஜ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு.
மாநில உதவி செயலர் தோழர் பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
Wednesday, June 18, 2014
Telecom panel okays policy for satellite phones
The Telecom Commission has given the approval for introducing satellite-based mobile services in the country. The approval comes after a recommendation from the Telecom Regulatory Authority of India (TRAI) to introduce a regulatory mechanism to govern satellite phones.Initially, the services will be offered by Bharat Sanchar Nigam Ltd through a partnership with INMARSAT.Satellites provide telephone and broadcasting services, covering large geographical areas. A satellite-based communication system provides an ideal solution for connecting remote and inaccessible areas. In addition, satellite communication is widely used for the transmission of emergency traffic, such as distress and safety messages, to and from vessels at sea or remote locations.Currently, in India, the satellite services of INMARSAT are used by maritime users through the Tata Communications Ltd under its international long-distance licence. Some limited number of users of land mobile have also been permitted by the DoT on a case-to-case basis.INMARSAT or International Mobile Satellite Organisation provides its satellite services with a constellation of four satellites which are located in the Geo-stationary earth orbit.Global coverageThese constellations of satellites provide global coverage. The present constellation, namely, I-3 satellites were launched in 1996. In view of the aging of these satellites, the INMARSAT has announced the retirement of some of its services from these old satellites starting from September 2014. INMARSAT has, meanwhile, launched the next generation satellites services.While the INMARSAT services cater to maritime communication, the Government had envisaged satellite services, namely, Global Mobile Personal Communication by Satellite (GMPCS) in the new telecom policy 1999. Under this licence, satellite-based communication services were permitted.However, establishment of GMPCS Gateway in India by the licensee was a mandatory license condition, which dampened interest from potential investors. This required substantial financial expenditure which was not feasible to be recovered from the limited number of users.Until now, DoT was giving permission to procure the INMARSAT handsets and taking services from a foreign service provider was given to meet the requirement of paramilitary forces and disaster management.However, there are security related limitations in this arrangement.There is a possibility of monitoring of calls outside the country as the earth station is located outside the country.In view of the above drawbacks, the Defence forces have not procured these handsets. They are continuing to use the old terminals.However, as declared by the INMARSAT, some of these old terminals will cease to be supported by their satellites from September.Thus, the decision by the Telecom Commission to permit BSNL to offer satellite services could help tide over the problems.
“It is a step in the right direction. This policy has been much delayed. Hopefully, this will trigger the Government to move ahead on other policy issues related to satellite communication,” said BK Syngal, Former Chairman, Videsh Sanchar Nigam Ltd.
நன்றி :- தி பிசினஸ் லைன்
Govt to draw up revival plan for MTNL and BSNL
The government has said that it will initiate steps to revive ailing telecom PSUs MTNL and BSNL as it looks to arrest the gradual decline in the fortunes of the two companies that once dominated the Indian telecom market.Communications and IT minister Ravi Shankar Prasad said that steps will be taken on a priority basis to revive the two PSUs that have failed to ride the boom in the Indian telecom sector even as private operators like Airtel, Vodafone and Idea grew from strength to strength."I have found that MTNL and BSNL have not received as much attention as required. They need proper infrastructure support," Prasad said as he also urged the PSUs to lay a special emphasis on improving their services. "I have asked them to improve services for consumer satisfaction. The government will provide infrastructure support."
நன்றி :- டைம்ஸ் ஆப் இந்தியா
எழுச்சிமிகு தமிழ் மாநில செயற்குழு
BSNLஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு சென்னை கிண்டியில் உள்ள CITU அலுவலகத்தில் 17.06.2014 அன்று காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் ராமர் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க தோழியர் V .P.இந்திரா, மாநில உதவி தலைவர் தலைமையில் எழுச்சியுடன் தொடங்கியது.
மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வின் சத்யராஜ் அஞ்சலி உரை நிகழ்த்த தோழியர் இந்திரா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் உரையில் ஜூன் 17ஆம் தேதியின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார். 1911 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மாவீரன் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டு கொன்று தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கினை மகாகவி பாரதி மற்றும் வ .உ .சிதம்பரனார் வரிசையில் வாஞ்சியின் நினைவு நாள் அன்று நமது செயற்குழு நடைபெறுவதை சுட்டி காட்டினார்.
மாநில செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் தன் உரையில் தொடர்ந்து வந்த இயக்கங்கள் மற்றும் அவரது உடல் நிலை காரணங்களால் மாநில செயற்குழு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதை சுட்டி காட்டி சென்னை சொசைட்டி தேர்தலில் நமது சங்கம் சார்பாக வெற்றி பெற்ற தமிழக தோழர்கள் யாரும் விலை போகாத பெருமையை ஒரு தீர்மானம் மூலமாக நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார். வரவிருக்கும் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 10,11,12 தேதிகளில் பொன்னி நதி கரையில் உள்ள திருச்சி நகரில் நடைபெற உள்ளதாகவும், மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 250/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.
நமது பொது செயலர் தோழர் .P .அபிமன்யு அவர்கள் தன் எழுச்சியுரையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதற்கு சோர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை மிக தெளிவாக கூறினார். 10 ஆண்டு கால ஐக்கிய முன்னணி அரசு அமல்படுத்திய புதிய தாராளமய கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் கடும் அடி கொடுத்து அந்த கட்சிக்கு எதிர் கட்சி தலைமைகூட கிடைக்காமல் செய்தது மிக பெரிய நிகழ்வு என்றும், தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு அதே புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்த முற்பட்டால் அவர்களுக்கும் மக்கள் இதே பதிலை தருவார்கள் என்று தெளிவுபடுத்தினார். பணவீக்கம் உயர்வது, டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு என்று தற்போது செய்திகளில் வருவதை பார்க்கும்போது புதிய அரசும் ஐக்கிய முன்னணி அரசு சென்ற அதே பாதையில் செல்வதை அவர் சுட்டி காட்டினார்.
இந்த நாட்டில் மட்டும் இன்றி பல வெளி வெளிநாடுகளிலும் புதிய தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை குறிப்பாக ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை அதிகரிப்பதும், நிரந்தர ஊழியர் எண்ணிக்கை குறைவதையும் உதாரணங்களுடன் கூறினார். நாட்டில் உள்ள ஆளும் கட்சிகளின் தொழிற் சங்கங்கள்கூட உலகமய, தாராளமய கொள்கைகளினால் தங்கள் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கபடும் நிலை கண்டு ஒரு வலுவான போராட்ட களத்தில் பங்கெடுப்பதை 10 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பிப்ரவரி வேலை நிறுத்தம் பறைசாற்றியது என்பதை சுட்டி காட்டி வலுவான போராட்டங்கள் முலமே நமது உரிமையை பாதுகாக்க முடியும் என்பதை சொல்லி அனைவருக்கும் உற்சாகம் ஊட்டினார். பொது செயலரின் உரை நமது தயக்கங்களை களைய செய்தது.
மத்திய ,மாநில சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதில் நமது விருதுநகர் மாவட்ட சங்கம் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் , மாவட்டத்தில் வளாச்சி பணிகளுக்கு தேவையான கேபிள் மற்றும் BTS களில் பேட்டரி பிரச்சனை ஆகியவற்றை நமது மாவட்ட செயலர் சுட்டி காட்டி உள்ளார். அனைத்து மாவட்ட மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஊழியர் பிரச்சனைகள் தீர்வில் அலட்சியம் காண்பிப்பதை கண்டித்து 04.07.2014இல் ஆர்ப்பாட்டம் மற்றும் 11.07.2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்க பட்டுள்ளது. தோழர் பரமேஸ்வரன் நன்றியுரை கூற இனிதே மாநில செயற்குழு முடிவுற்றது.
மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வின் சத்யராஜ் அஞ்சலி உரை நிகழ்த்த தோழியர் இந்திரா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் உரையில் ஜூன் 17ஆம் தேதியின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார். 1911 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மாவீரன் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டு கொன்று தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கினை மகாகவி பாரதி மற்றும் வ .உ .சிதம்பரனார் வரிசையில் வாஞ்சியின் நினைவு நாள் அன்று நமது செயற்குழு நடைபெறுவதை சுட்டி காட்டினார்.
மாநில செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் தன் உரையில் தொடர்ந்து வந்த இயக்கங்கள் மற்றும் அவரது உடல் நிலை காரணங்களால் மாநில செயற்குழு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதை சுட்டி காட்டி சென்னை சொசைட்டி தேர்தலில் நமது சங்கம் சார்பாக வெற்றி பெற்ற தமிழக தோழர்கள் யாரும் விலை போகாத பெருமையை ஒரு தீர்மானம் மூலமாக நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார். வரவிருக்கும் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 10,11,12 தேதிகளில் பொன்னி நதி கரையில் உள்ள திருச்சி நகரில் நடைபெற உள்ளதாகவும், மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 250/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்தார்.
நமது பொது செயலர் தோழர் .P .அபிமன்யு அவர்கள் தன் எழுச்சியுரையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதற்கு சோர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை மிக தெளிவாக கூறினார். 10 ஆண்டு கால ஐக்கிய முன்னணி அரசு அமல்படுத்திய புதிய தாராளமய கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் கடும் அடி கொடுத்து அந்த கட்சிக்கு எதிர் கட்சி தலைமைகூட கிடைக்காமல் செய்தது மிக பெரிய நிகழ்வு என்றும், தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு அதே புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்த முற்பட்டால் அவர்களுக்கும் மக்கள் இதே பதிலை தருவார்கள் என்று தெளிவுபடுத்தினார். பணவீக்கம் உயர்வது, டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு என்று தற்போது செய்திகளில் வருவதை பார்க்கும்போது புதிய அரசும் ஐக்கிய முன்னணி அரசு சென்ற அதே பாதையில் செல்வதை அவர் சுட்டி காட்டினார்.
இந்த நாட்டில் மட்டும் இன்றி பல வெளி வெளிநாடுகளிலும் புதிய தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை குறிப்பாக ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை அதிகரிப்பதும், நிரந்தர ஊழியர் எண்ணிக்கை குறைவதையும் உதாரணங்களுடன் கூறினார். நாட்டில் உள்ள ஆளும் கட்சிகளின் தொழிற் சங்கங்கள்கூட உலகமய, தாராளமய கொள்கைகளினால் தங்கள் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கபடும் நிலை கண்டு ஒரு வலுவான போராட்ட களத்தில் பங்கெடுப்பதை 10 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பிப்ரவரி வேலை நிறுத்தம் பறைசாற்றியது என்பதை சுட்டி காட்டி வலுவான போராட்டங்கள் முலமே நமது உரிமையை பாதுகாக்க முடியும் என்பதை சொல்லி அனைவருக்கும் உற்சாகம் ஊட்டினார். பொது செயலரின் உரை நமது தயக்கங்களை களைய செய்தது.
மத்திய ,மாநில சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதில் நமது விருதுநகர் மாவட்ட சங்கம் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் , மாவட்டத்தில் வளாச்சி பணிகளுக்கு தேவையான கேபிள் மற்றும் BTS களில் பேட்டரி பிரச்சனை ஆகியவற்றை நமது மாவட்ட செயலர் சுட்டி காட்டி உள்ளார். அனைத்து மாவட்ட மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஊழியர் பிரச்சனைகள் தீர்வில் அலட்சியம் காண்பிப்பதை கண்டித்து 04.07.2014இல் ஆர்ப்பாட்டம் மற்றும் 11.07.2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்க பட்டுள்ளது. தோழர் பரமேஸ்வரன் நன்றியுரை கூற இனிதே மாநில செயற்குழு முடிவுற்றது.
மாநில சங்க சுற்றறிக்கை எண் 141 படிக்க :-Click Here
Tuesday, June 17, 2014
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...