Monday, May 19, 2014

எல்லையை விரிவுபடுத்துவோம்

                      விருதுநகர் மாவட்டத்தில் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க தோழர்கள் ஒரு குடும்ப சுற்றுலாவாக கேரள மாநிலத்திற்கு கடந்த 14,15 தேதிகளில் சுமார் 153 பேர் மூன்று பேருந்துகளில் சென்று வந்தோம். நமது சங்கத்திற்கு இது ஒரு புதிய அனுபவம் ஆனதால் பல நடைமுறை சிக்கல்களை சந்தித்த போதிலும் நம் ஊழியர்களிடையே சங்க ஒருங்கிணைப்பை தாண்டி ஒரு குடும்ப ஒருங்கிணைப்பை பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதில் ஒரு வெற்றியை பெற்றோம் என்றால் மிகையல்ல. மாவட்ட சங்கம் சார்பாக பல போட்டிகளை நடத்தியபோது அனைவரும் பெரும் மகிழ்வோடு கலந்து கொண்டது சிறப்பான அம்சமாகும் .ஒரு சுற்றுலாவை எப்படி நடத்த வேண்டும், தவிர்க்க வேண்டியவை என்ன என்பதை ஒரு பாடமாக கற்று கொடுத்தது இந் நிகழ்ச்சி. நமது 8 கிளை செயலர்களில் தோழர் காதர் மொய்தீன் உட்பட 5 பேர் பங்கேற்றனர். தோழர் ஜெயபாண்டி, தோழர் முத்துராமலிங்கம், தோழர் சமுத்திரம், தோழர் சிங்காரவேல் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். மாவட்ட சங்க நிர்வாகிகளில் இளைய தோழர் அஷ்ரப்தீன், தோழர் மதிகண்ணன், தோழர் ராஜ்மோகன், தோழர் சந்திரசேகரன்தோழர் ரவீந்திரன், தோழர் ராஜாராம் மனோகரன் தோழர் K.R.கிருஷ்ணகுமார் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். நமது முன்னாள்  மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் மூத்த கணக்கு அதிகாரி தோழர் ராதாகிருஷ்ணன் இருவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  














Athirapally Falls

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...