GM அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் ஆண்டு பொது குழு கூட்டம் 21/08/2018 அன்று அதன் கிளை தலைவர்கள் தோழர் சிங்காரவேலு மற்றும் தோழியர் தனலட்சுமி தலைமையில் மிக எளிமையாக நடைபெற்றது . கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் மற்றும் நியூ டெல்லி பேரணிக்கு ஊழியர்களை திரட்டுவது என்ற பல பணிகள் குறுக்கிட்டதால் மாநாட்டை எளிய முறையில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .மறைந்த தலைவர்கள் மற்றும் கேரளா வெள்ளத்தில் பலியான பொதுமக்களுக்கு தோழர் சந்திரசேகரன் அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநாட்டை முறையாக மாவட்ட செயலர் துவக்கி வைத்து உரை நிகழ்த்த ,ஆண்டு அறிக்கையை தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து சமர்ப்பிக்க , மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .புதிய நிர்வாகிகளாக GM அலுவலக கிளைக்கு தோழர்கள் G.தனலட்சுமி ,M.S.இளமாறன் ,A.கோவிந்தராஜ் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .SDOP கிளைக்கு தோழர்கள் சிங்காரவேலு ,மாரிமுத்து மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment