விருதுநகர் மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கடந்த 12/05/2018 அன்று சிவகாசியில் அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் M .கருப்பசாமி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தேசிய கொடியை மூத்த தோழியர் மாரியம்மாள் ஏற்றி வைக்க, TNTCWU சங்க கொடியை தோழியர் ஜோதி விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றி வைத்தார் .அஞ்சலி தீர்மானத்தை தோழர் சபரி வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மீது விவாதம் நடைபெற்று திருத்தங்களுடன் ஏற்று கொள்ளப்பட்டது .மாநில செயலர் தோழர் வினோத்குமார் எழுச்சியுரை நிகழ்த்தினார். தோழர் வேலுச்சாமி சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் பின் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் M .S இளமாறன், N.ராமசந்திரன், வேல்ச்சாமி ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாளர் ஆக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .இந்த மாநாட்டில் BSNLEU சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,அதன் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் மாவட்டம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட TNTCWU சங்க தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டது ஒரு சிறப்பு மிக்க பதிவு ஆகும் .






























No comments:
Post a Comment