விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அஞ்சலியுரையுடன் தொடங்கிய மாவட்ட செயற்குழுவில் ஆய்படுபொருளை தலைவர் விளக்கியதைத் தொடர்ந்து, விவாதக் குறிப்புகளை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் முன்வைத்தார்.
அஞ்சலியுரையுடன் தொடங்கிய மாவட்ட செயற்குழுவில் ஆய்படுபொருளை தலைவர் விளக்கியதைத் தொடர்ந்து, விவாதக் குறிப்புகளை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் முன்வைத்தார்.
டெல்லி பேரணி மற்றும் மாநிலச் சங்கச் செயல்பாடுகள் குறித்து மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஆய்படுபொருளின் மீதும் விதாகக் குறிப்புகளின் மீதும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்
- BSNL ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட மாநாட்டை வரும் மே மாதம் 29-30 தேதிகளில் நடத்துவது.
- நமது மாவட்ட மாநாட்டிற்கு அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர் எஸ். செல்லப்பா, மாநிலச் செயலர் ஏ. பாபு ராதாகிருஷ்ணன் மற்றம் மாநில உதவிச் செயலர் தோழர் எம். முருகையா ஆகியோரை அழைப்பது.
- முதல் நாள் மாநாடு பிரதிநிதிகள் அமர்வு, தோழமை சங்கங்களின் வாழ்த்துரை நிகழ்ச்சி நடைபெறும்.
- இரண்டாம் நாள் பொது அரங்கம், சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெறும். இதில் மாவட்டப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் (நிதி) ஆகியோரை அழைப்பது. பொது அரங்கில் உரை நிகழ்த்த CITU சங்கம் சார்பாக ஒரு சிறப்புப் பேச்சாளரை அழைப்பது.
- விருதுநகர் மாவட்டத்தில் ஒட்டு மொத்த GSM சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்க கொண்டு செல்வது.
- ஏராளமான AirCell வாடிக்கையாளர்கள் BSNL சேவையை ஏற்க வருவது அதிகரித்து உள்ள சூழலில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் தற்காலிகமாக கூடுதல் பணியாளர்களை அமர்த்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.
- Long Stay மாறுதலில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அடிப்படையில் மாறுதல்களை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது.
- 30.04.2018வரை ரோடு ஷோக்களில் திரளாகப் பங்கேற்பது.
- NFTE மாவட்ட மாநாட்டில் நமது BSNLEU மாவட்டச் செயலரை தரக்குறைவாகப் பேசியவர்களை இந்த மாவட்டச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
No comments:
Post a Comment