ஒற்றுமையில் உருவான பிரமிக்கத்தக்க மனித சங்கிலி போராட்டம்
புதிய டவர் நிறுவனத்தை உருவாக்கி BSNL நிறுவனத்தை தனியார் மயப்படுத்திட நினைக்கும் நடுவண் அரசை கண்டித்தும் 01/01/2017 முதல் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வலியுறுத்தியும் இன்று நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மனித சங்கிலி நிகழ்வுகள்.முன்னதாக மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்ற கூட்டத்திற்கு NFTE மாவட்ட செயலர் தோழர் ராமசேகர் வகிக்க ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி மற்றும் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,SNEA மாநில சங்க நிர்வாகி சந்திரசேகரன் ,AIGETOA மாநில சங்க நிர்வாகி விக்டர் சாம்சன் சேவா BSNL மணிலா சங்க நிர்வாகி சகோதரர் .R பிரேம்குமார் ஆகியோர் பேசினர் .பின்னர் மதுரை ரோட்டில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமசாமி துவக்கி வைத்தார் .மாவட்ட முழுவதும் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ,அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள் ,ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர் .நமது TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் மற்றும் AIDBPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment