இன்று மாலை கிளை தலைவர் தோழர் U. B. உதயகுமார் தலைமையில் அருப்புக்கோட்டை கிளை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கிளைகூட்டத்தை முறையாக மாவட்ட செயலர்ர வீந்திரன் துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார். வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவுடன் இணைந்து நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை பற்றியும், வர உள்ள 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டிய அவசியத்தை பற்றியும் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார். மனித சங்கிலி இயக்கத்தில் பெருவாரியாக கலந்து கொண்ட கிளைக்கு மாவட்ட சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்தார். அதன் பின் மாவட்ட தலைவர் தோழர் R. ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் டெல்லி பேரணியை பற்றி விரிவாக பேசினர். டெல்லி பேரணியில் பங்கேற்ற தோழர்கள் A. சோலை, கிளை செயலர் மற்றும் தோழர் A. அய்யனார் இருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
அதன் பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் தோழர் S.சந்திரசேகரன் அவர்கள் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களால் பாராட்டு பெற்றார் .அவரை வாழ்த்தி மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர் தோழர் A .கண்ணன் ,தோழர்கள் அஷ்ரப் தீன் ,TNTCWU மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ஆகியோர் பாராட்டி பேசினர். ஏற்புரையை நெகிழ்ச்சியுடன் நிகழ்த்திய தோழர் சந்திரசேகரன் நமது BSNLEU சங்க செயல்பாட்டை நினைவு கூர்ந்தார்.