அருப்புக்கோட்டை கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் 09/09/2017 அன்று மாலை 5 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் பதவி உயர்வு பெற்று செல்வதை ஒட்டி அவருக்கு சிறப்பான பாராட்டு விழாவும் கிளை மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது. தியாகிகளுக்கு தோழர் சோலை அஞ்சலி செலுத்தினார். அதன் பின் கிளை செயலர் தோழர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன், கோட்ட பொறியாளர், அருப்புக்கோட்டை, மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், JCTU தோழர் ராஜாராம், மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி, காதர் மொய்தீன், மாரியப்பா, மாரிமுத்து, சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் அய்யனார் அவரகள் தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதன் பின் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோழர்கள் அனைவரும் தோழர் அஷ்ரப் தீன் அவர்களின் தொழிற்சங்க பணியை நினைவு கூர்ந்தனர். மாவட்ட சங்கம் சார்பாக தோழர் அஷ்ரப் தீன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார். புதிய கிளை செயலர் தோழர் சோலை நன்றி நவின்றார்.





No comments:
Post a Comment