ஜூலை 27 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்ட வெற்றிக்கு கட்டியம் கூறிய நெல்லை விரிவடைந்த மாநில செயற்குழு
சுதந்திர போராட்ட தியாகிகள் பலரை தந்த தாமிரபரணி மண்ணில் நமது தமிழ் மாநில விரிவடைந்த செயற்குழு நடைபெற்றது .விண்ணதிரும் கோஷங்களுடன் தேசிய கொடியை ஈரோடு மாவட்ட செயலர் தோழர் பரமேஸ்வரன் ஏற்றி வைக்க ,சங்க கொடியை நமது பொது செயலர் தோழர் அபிமன்யு ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தோழர் கிறிஸ்டோபர் பேசினார் . அனைவரையும் வரவேற்று நெல்லை மாவட்ட செயலர் தோழர் சூசை வரவேற்புரை நிகழ்த்தினார் விவாத குறிப்பை சமர்ப்பித்து நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார் . குறிப்பாக வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை வெற்றி அடைய செய்வது , புதிய உறுப்பினர்களை சேர்ப்பது ,தீண்டாமை ஒழிப்பு முன்னணிஅனைத்திந்திய மாநாட்டுக்கு அனைவரிடமும் ரூபாய் 25 வசூல் செய்வது ஆகியவை விவாத குறிப்பில் இருந்தவை .விவாத குறிப்பில் இருந்த விஷயங்கள் மீது அனைத்து மாவட்ட சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .நமது மாவட்டம் சார்பாக நமது மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் கலந்து கொண்டார் .விரிவடைந்த மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து நமது பொது செயலர் உரை நிகழ்த்தினார் .தனது உரையில் ஊதிய மாற்றத்திற்கான விஷயத்தில் நமது நிலை பாடு , அரசின் நிலைபாடு , நிறுவனத்தின் நிலை பாடு , தோழமை சங்கங்களின் நிலைபாடு ஆகியவற்றை விரிவாக விளக்கினார் .ஒட்டு மொத்தமாக அரசின் நிலைபாடு ஊதிய மாற்றத்திற்கு எதிராகவே உள்ளதால் போராட வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டினார் .அதே போல் நிறுவனத்தின் போக்கு தொழிற்சங்க இயங்கங்களுக்கு எதிராக உள்ளதை சுட்டி காட்டி ,அப்போக்கை சரி செய்யும் வரை மார்க்கெட்டிங் பணிகளால் ஈடுபட வேண்டியது இல்லை என்பதையும் சுட்டி காட்டினார் , இச் செயற்குழுவில் SNEA மாநில செயலர் ராஜசேகர் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் வினோத்குமார் ,AIGETOA சங்க மாநில சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு 27 ஆம் தேதி போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வாழ்த்துரை வழங்கினர் .நமது மாவட்டத்தில் இருந்து 12 தோழர்கள் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment