கேபிள் மற்றும் ஹவுஸ் கீபிங் பகுதியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் பட்டுவாடா ஆகாமல் உள்ளதை இன்று நமது சங்கம் துணை பொது மேலாளர் அவர்களை சந்தித்து கடுமையாக சுட்டி காட்டியது . மாநில மட்டத்தில் வரும் உத்தரவுகளை ஒப்பந்தகாரர்கள் மதிப்பது இல்லை .உரிய தேதியில் அவர்கள் சம்பளத்தை வழங்க மறுக்கும் போது மாவட்ட நிர்வாகமே சம்பளத்தை பட்டுவாடா செய்யவேண்டும் என நாம் கூறியபிறகு மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பளத்தை வழங்க நிர்பந்தம் செய்த பிறகு இன்று மாலை கேபிள் பகுதிக்கு மட்டும் சம்பளம் பட்டுவாடா அதுவும் ரூபாய் 1000/- குறைவாக ஆகி உள்ளது .இவ் விஷயம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹவுஸ் கீபிங் பகுதியில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளை சம்பளம் பட்டுவாடா ஆக வில்லையெனில் 16-07-2014 அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
No comments:
Post a Comment