புத்தகம் அறிவூட்டுகிறது .அன்பு புகட்டுகிறது .ஆவேசம் கொள்ள வைக்கிறது .சோகத்தை தணிக்கிறது.தனிமையை போக்குகிறது . நம்பிக்கை வழங்குகிறது .உயிர்ப்போடு இருக்க வைக்கிறது .புத்தகம் கால யந்திரம் போல. அது தான் பேசுகிற காலத்திற்குள், அந்த குறிப்பிட்ட நிகழ்வுக்குள் வாசகரை கொண்டு இறக்குகிறது .ஒரே ஒரு துளி மை ஒரு மில்லியன் பேரை சிந்திக்க வைக்கிறது என்றார் அறிஞர் .லார்ட் பைரன் .அடுத்த தலைமுறைகாண பரிசை கொடுக்க விரும்பினால் புத்தகங்களை கொடு என்கிறது சீன பழமொழி . யுனஸ்கோ விடுத்த அறைகூவலின் படி ஏப்ரல் 23 நாளை உலக புத்தக தினமாக கொண்டாடுகிறோம் .வாசிப்போர்க்கு அந்த ஒரு தினம் மட்டுமா அல்ல வாசிக்கும் ஒவ்வொரு நாளுமே இன்ப வாழ்கை வாழும் தினம் தான் .

No comments:
Post a Comment